‘செயற்கை’ மனைவி!
விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி, செயற்கையையும் இயற்கையுடன்
ஒன்றிணைத்துவிடும் அளவுக்கு ஆச்சரியப்பட வைக்கும் கண்டுபிடிப்புகளின்
கூடாரமாக இருக்கிறது. குறிப்பாக, செயற்கையான மனித உறுப்புகள்
உருவாக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் இணைந்திருக்கிறது
செயற்கைப் பெண் பொம்மை. ஆனால் இது பார்ப்பதற்கு பொம்மை போல் தெரியாததுதான்
சிறப்பம்சம். அச்சு அசலாக பெண்ணை போன்ற தோற்றத்தில் ஜப்பானிய நிறுவனம்
ஒன்று பொம்மைகளை வடிவமைத்து அசத்தி இருக்கிறது.
பொம்மை விற்பதில் முன்னணியில் வகிக்கும் ஒரியன்ட் தொழிற்சாலையின் புதுவரவாக இந்த பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பொம்மையின் தோல் பகுதியும், கண்களும் நிஜ பெண்களை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த பொம்மைகளை பார்ப்பவர்கள் நிஜ பெண்கள் என்றே நினைத்துவிடுவார்கள். அந்த அளவுக்கு தத்ரூபமாக கண்ணைக் கவரும் வகையில் அழகான தோற்றத்துடன் இந்தப் பெண் பொம்மைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த பொம்மைக்கு ‘செயற்கை மனைவி’ என்று அந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த பொம்மைகள் வாங்குபவர்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு உயரங்களை கொண்டிருக்கின்றன. தற்போது ஜப்பானில் மட்டும் இந்தப் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஜப்பானிய இளம் ஆண்கள் இந்தப் பொம்மைகளை விரும்பி வாங்கிச் செல்வதாகவும், விரைவில் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ஒரியன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment