செல்லப்பிராணிகளுக்கான சலூன்: விதவிதமான வண்ணங்களில் வலம் பூனைகள்
முடிகளில் விதவிதமான வண்ணங்களில் டை, நேர்த்தியான முடிவெட்டு, இதுதான் தற்போது ரஷ்யாவில் செல்லப்பிராணிகளுக்கான பேஷன்.
செல்லப்பிரணிகளுக்காகவே
ரஷ்யாவில் பிரத்யேகமாக தனி சலுன் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
ஆமாம் நம்பித்தான் ஆக வேண்டும் விதவிதமான கலர்களுடன் ஒரு வித்தியாசமான
உருவங்களில் தற்போது ரஷ்யாவில் பூனைகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட
விலங்குகள் வலம் வருகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இதை
செல்லப்பிராணிகளும் ரசிப்பதாக கூறுவதுதான்.
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள யெகேடின்பர்க் நகரத்தில் செல்லப்பிரணிகளுக்கான சலூன் உள்ளது. அதன் உரிமையாளர் டாரியா கோட்ஸ் தனது சலூனில் அலங்கரிக்கப்பட்ட ஒரு பூனையை காண்பித்தார். பச்சை வண்னத்தில் அழகாக முடிவெட்டுடன் அது டிரகன் போலவே காட்சி அளிக்கிறது. அதேபோன்று வண்டு போன்ற நிறம் கொண்ட நாய்குட்டியையும் காண்பித்தார்.
இந்த சாயங்கள் அடிப்பதனால் விலங்குகளுக்கு அது பின் விளைவுகளை ஏற்படுத்தாது என்று உறுதி பட தெரிவித்தார். ஏனெனில் இது தாவர சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கையான சாயமாகும் என்றார்.
அந்த சலூன் கடைக்கு வந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், எங்கள் நாயை ஒரே மாதிரியாக பார்த்து எங்களுக்கு சலித்து விட்டது. எனவே எங்கள் நாயை நாங்கள் அழகுபடுத்த நினைத்தோம். அதற்கு ஒரு தேனீ போன்று சாயம் பூசினோம். தற்போது மிகவும் வண்ணமயமாக அழகாக உள்ளது.
ஆனால் விலங்குகளுக்கு இது போன்று வண்ணச்சாயங்கள் பூசக்கூடாது என்று விலங்குகள் நல ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment