ஏரோபிக் பயிற்சியால் குழந்தைகள் நினைவாற்றல் கூடும்: ஆய்வு
சமீபத்தில் வெளிவந்த ஆய்வு ஒன்றில், ஒன்பது முதல் பத்து
வயதிலுள்ள குழந்தைகளுக்கு ஏரோபிக் பயிற்சி மூலம் கற்றுக்கும் திறனும்,
நினைவாற்றலும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த
ஆய்வு அமெரிக்காவிலுள்ள இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்), ஒன்பது
முதல் பத்து வயதிலுள்ள 48 குழந்தைகளிடம் நடத்தப்பட்டது. அவர்களிடம் ஒரு
கற்பனையான வரைபடத்திலுள்ள பெயர்களையும் இடங்களையும் நினைவில் கொள்ளமாறு
கூறினர். அதனை நினைவுக்கூர்ந்து கூறுகையில், உடற்பயிற்சி செய்து நல்ல
ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளின் நினைவாற்றல் மற்ற சாதாரண குழந்தைகளை
விடவும் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
குழந்தைகள்
படிக்கும் விதத்தை ஆய்வு செய்கையில், ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் சாதாரண
குழந்தைகளுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது.
இந்த
ஆய்வின் மூலம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் திறன்,
நினைவாற்றல் அதிகரிக்க, ஏரோபிக் பயிற்சிகள் நல்ல பலன் அளிக்கும் என்பது
ஆய்வாளர்களின் கருத்து.
இதனைத்தொடர்ந்து, குழந்தைகளிடம்
படிக்கும்போது நிகழும் நரம்பியல் செயல்முறைகளைப் பற்றி ஆய்வு
செய்யவிருப்பதாகக் கூறுகின்றனர், இலினொய் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்.
No comments:
Post a Comment