Friday, 16 January 2015

January 17: boxer Muhammad Ali's birthday special partition

Appears when you write about some of the thrill. Muhammad Ali, who lived a life like that. Cassius Clay, who was born with the name aprikkar American by birth. The picture painted by the father, who was brought back to the Board for the Protection of simple manitarkle kalattukkul laws perratellam his success there is a winner.

He defeated his opponent in one punch varalarellam constantly have different gains. "Mitantitunkal as the butterfly; teniyaippola throw!" He echoed the wording of the whole United States. "I'M THE GREATEST!" Fans when he said, "Yes! Yes!" He observed.


 




Heavy weight champion was tested twice, was a culmination of multiple experiments would seem to say Yes. He came to the Olympics with tankapatakkam alillai also welcome to racism; Apartheid-waiter did not even respect. Huff also walked threw the medal in the river.

Ali, who converted to Islam after attending the tournament avaraimukamatu rival refused to be called; Chaffed meeting. However, he became world champion. Compulsory military service in Vietnam and the United States to engage with young people to join him to come and said, "I will not take part in the battle of killing innocent people!" He said he created a huge wave.

Boxing waiting for him to appear on the US government lifted a license; Vanavacamp three years if the failure to meet a variety of recovering after he lost the fight. That's all laughed at the country.

Then came the World Championships, the only person to have won more than one medal, losing the championship after a period of three years' exile elsewhere. But Muhammad Ali won the show! Blows to the head of him that he had purchased mutakkipottatu parkincan mutakkipottatuanalum syndrome afflicts him, he utavivantar to the needy through various fundraising.

He insults produced a light load for the Atlanta Olympics pirayacittam allowed him, "My left hand trembling with Parkinson's syndrome. The right hand trembling with fear in the midst of this, I have lit a light!" And just how much confidence after taxes. He's
Birthday Today

Friday, 9 January 2015

சின்னதிலிருந்து பிரம்மாண்டமாய்...

 
 
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 10 வருடங்களுக்கு முன்னால் நான்தான் மைக் மோகன். பள்ளிப் பருவத்திலும் பாட்டுப் போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு.

 கல்லூரியில் முதலாம் வருடத்திலேயே திருச்சியில் உள்ள பிரபலமான இசைக் குழுக்களில் பாட ஆரம்பித்து விட்டேன். என் பேராசிரியர்கள் ஆதரவோடு “ஜெயஸ்ருதி” என்ற பெயரில் இசைக் குழுவும் நடத்தினேன். 

கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பாட்டுப் போட்டியில், வருடம் தோறும் எங்கள் கல்லூரியின் சார்பில் நானும் என் நண்பன் முத்துவும் கலந்து கொள்வோம். மூன்று முறையும் அந்தப் போட்டிகளில் நான்தான் முதல் பரிசு. என் நண்பன் முத்து பரிசு பெறவில்லை. 

ஆனால், எங்கள் கல்லூரியில் துறைகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் நான் முதல் பரிசு. முத்து இரண்டாம் பரிசு. 

முத்து ஹாஸ்டல் ரூம்ல காலையில் ஒரு ஹார்மோனியத்த வச்சிகிட்டு சா.......பா......ஸா....... னு சாதகம் செய்வான். மாலையில் பாட்டு கத்துக்க எங்கேயோ போவான்.

 எங்க ஹாஸ்டல்ல 20 பாத்ரூம் ஒண்ணா இருக்கும். அத்தனைக்கும் மொத்தமா அவன்தான் ஆல் இண்டியா ரேடியோ. 


பாத்ரூமில் ஷவரைத் திறந்து விட்டுட்டு ஆ......ஊ........னு கத்துவான். எவ்வளவு கிண்டல் பண்ணாலும் அவன் செய்றதத்தான் செய்வான். வெட்கப்படவே மாட்டான். 

திருச்சியில் இருக்கும் ஓர் இசைக்குழுவில் சேர்ந்து விட்டதாக ரொம்ப பெருமிதமா என்னிடம் வந்து ஒரு நாள் சொன்னான். 

அந்தச் சமயம் நான் இசைக் குழுக்களில் பாடுவதையே நிறுத்திவிட்டேன். ஒரு உள்ளூர் தொலைக்காட்சியில் ஒரு பேட்டிக்காக அழைத்தார்கள். அதற்கும் போகவில்லை. முத்து மட்டும் தொடர்ந்து சின்னச் சின்ன முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தான். 

மூன்றாம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் காலை. கல்லூரியின் நோட்டீஸ் போர்டு அருகே செமக் கூட்டம். கூட்டத்தை முண்டிக்கொண்டுப் போய் பார்த்தேன். 

“திருச்சியின் சிறந்த பாடகராய் முத்து தேர்ந் தெடுக்கப்பட்டார்” என்ற செய்தி. முத்து கையில் மைக் வைத்துப் பாடிக் கொண்டிருப்பதுபோல் புகைப்படம் தாங்கிய பல நியூஸ் பேப்பர் கட்டிங்குகள் ஒட்டப்பட்டிருந்தன.

 நெஞ்சுகுள்ள ராவா ஆசிட் ஊத்தி விட்டது போலாயிடுச்சி எனக்கு. 

சிறந்த பாடகரைத் தேர்வு செய்யப் போவதாய் ஒரு கிளப் விளம்பரம் செய்ததை நானும் பார்த்தேன். ஆனால் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு அலட்சியம் எனக்கு. 

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்க வில்லை.ஆனால் அதை ஒரு வாய்ப்பாக அடையாளம் கண்டு முத்து ஜெயித்திருக்கிறான்.
மூன்று வருடமா கேம்பஸ் ஹீரோவா இருந்த என்னை, முத்து ஒரே நாளில் காலி பண்ணிட்டான். 

உண்மையில் என் புகைப்படம் அது போல் நியூஸ் பேப்பரில் வரவேண்டும் என்பது என் மிகப்பெரிய கனவு. ஆனால் எந்த முயற்சியும் இல்லாம வெறும் கனவை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
இதெல்லாம் நடந்து முடிந்து மீண்டும் கல்லூரி அளவில் நடந்த பாட்டுப் போட்டியில் நான் முதல் பரிசு பெற்றேன். 

முத்து இந்த முறையும் இரண்டாம் பரிசுதான்.ஆனாலும் “திருச்சியின் சிறந்த பாடகர்” பட்டம் பெற்றது முத்துதான். 


வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறான் முத்து. தகுதியிருந்தும் ஒரு நல்ல வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறேன் நான்.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஜெயிப்பவர்கள் எல்லோரும் சிறிய சிறிய விஷயங்களில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள். 


வாய்ப்பு , திறமை, எல்லாம் சம அளவில் இருந்தாலும் சிலர் சின்னச் சின்ன விஷயங் களில் கூடுதல் கவனம் செலுத்தி முந்திவிடுகிறார்கள்.

 சில கால இடைவெளிக்குப் பின் இவர்கள் மிகப் பிரம்மாண்டமாய் எழுகிறார்கள். 


உண்மையில் பிரம்மாண்டமென்பது சின்னச் சின்ன காரியங்களில் காட்டப்படும் நேர்த்தியே தவிர வேறொன்று மில்லை.

 இதைப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிக்கும் எவரும் பிரம்மாண்டமானவராக ஆகலாம். 


ஏ.வி. எம் ஸ்டுடியோ என்ற சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஏ.வி.மெய்யப்பன் மரணப் படுக்கையின் கடைசி நிமிடங்களில் “ ஏன் லைட் வீணாக எரிகிறது? அதை அணையுங்கள்” என்றாராம். 


தங்கள் வாழ்க்கையை வரலாறாக மாற்றியவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தங்களை ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். ஏ.வி.மெய்யப்பனைப் போல! முத்துவைப் போல!

பூமியின் தென்துருவத்தில் நமது கொடி

 
 
 
உலகத்தின் நிலப்பரப்பு ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் பரப்பளவை வைத்து மதிப்பிட்டால் ஐந்தாவது இடத்தில் அண்டார்ட்டிகா கண்டம் இருக்கிறது. பூமியின் தென் துருவத்தில் உள்ளது. அங்கே எங்கும் பாறையாக இறுகிக் கிடக்கிறது ஐஸ். உண்மையான தரை அந்தப் பனிப்பாறைகளுக்கு அடியில் சில கிலோ மீட்டர்களுக்குக் கீழே இருக்கிறது.
அண்டார்ட்டிகாவுக்கே உரிய சில விலங்குகள் ,சில தாவரங்கள்தான் அங்கே உயிர்வாழ்கின்றன. அந்தக் கண்டத்தில் ஆய்வு மட்டும்தான் செய்ய வேண்டும் என 1959- ல் 12 நாடுகள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அது தற்போது 49 நாடுகளாய் விரிந்துள்ளது. 


28 நாடுகள் அங்கே ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளன. கண்டத்தின் சில பகுதிகளை ஏழு நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. இங்கே கோடைக் காலத்தில் மட்டும் 5000 ஆய்வாளர்கள் வரை இருப்பார்கள். 

இந்தியாவின் கொடி
 
அண்டார்ட்டிகா மண்ணில் கொடியை நட்ட 13வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. அதை இதே தேதியில் பேராசிரியர் டாக்டர் சயீத் ழகூர் குவாசிம் நமக்குக் கிடைக்கச் செய்தார். அங்கு இந்தியா ஒரு நிலையத்தை அமைத்துள்ளது. அதில்தான் பல துறை ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. 

சயீத்தை தலைவராகக் கொண்ட 21 விஞ்ஞானிகள் கோவா கடற்கரையில் இருந்து ஐஸ் உடைக்கும் கப்பலில் டிசம்பர் 6- ல் புறப்பட்டனர். நான்காவது முயற்சியில் அவர்களால் இதே தேதியில் தரை இறங்க முடிந்தது. அங்கே 10 நாட்கள் தங்கினர். அங்கிருந்து கிளம்பிப் புறப்பட்ட இடத்துக்கு 1982 பிப்ரவரி 21ல் திரும்பினர். அவர்களின் பயணம் 77 நாட்களில் முடிந்தது. 

உத்திரபிரதேசத்தில் பிறந்த பேராசிரியர் சயீத்துக்கு தற்போது 87 வயதாகிவிட்டது. டில்லியில் இன்னமும் வாழ்கிறார்.

மனவெழுச்சியின் பக்குவம்

 
 
 
எந்த ஒரு தனிநபரின் ஆளுமை வளர்ச்சிக்கும் அவர் தன்னிடம் எழக்கூடிய மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையைப் பெற்றிருக்கிறாரா என்பது இன்றியமையாதது. கட்டுப்படுத்துதல் என்பது உணர்ச்சிகளை மழுங்கடித்தல் அல்ல. உணர்ச்சிகள் இல்லாமல் இருத்தல் என்பதும் அல்ல.

மாறாக உணர்ச்சிகளைச் சிறப்பாகக் கையாளுவதுதான். இதனை மனவெழுச்சிப் பக்குவம் எனலாம். மனவெழுச்சி முதிர்ச்சி என்றும் சொல்லலாம். 

மனவெழுச்சி என்பது உணர்வுகள் மேலோங்கி இருக்கும் ஒரு நனவு நிலையாகும். மகிழ்ச்சி, துக்கம், அன்பு, கருணை, அருவருப்பு, பயம் போன்ற உணர்ச்சிகள் மனிதர்களிடையே தோன்றும் மனவெழுச்சிகள் ஆகும். இவற்றைப் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான வகையில் வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டு உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் மனவெழுச்சியில் பக்குவப்பட்டவர் ஆகிறார்.

எவன் ஒருவன் அனைத்திலும் பற்று வைக்காமல் அந்தந்த நல்ல அல்லது கெட்ட பொருளை அடைந்து மகிழ்வதுமில்லையோ வெறுப்பதுமில்லையோ அவனுடைய புத்தி ஸ்திரமானது என்று மனவெழுச்சிப் பக்குவத்தைப் பற்றி பகவத்கீதை கூறுகிறது. 


ஒரு நாடு அல்லது ஒரு அமைப்பிலுள்ள தனி நபர்களின் மனவெழுச்சி பண்படும்போது அந்த அமைப்பு ஒத்திசைவான வளர்ச்சியையும் செழுமையையும் பெறுவது திண்ணம். 

தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த வழக்கறிஞரை நிறப்பாகுபாட்டின் காரணமாக மூட்டை முடிச்சுகளோடு வெளியே தள்ளினார்கள் வெள்ளையர்கள். அந்த வழக்கறிஞரின் உணர்வுகள் மரத்துப்போகவும் இல்லை. மறந்து போகவும் இல்லை. அந்த வழக்கறிஞர் பின்னாளில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் தேசத்தை உருவாக்கி தேசப்பிதாவாக உயர்ந்தார். 

காந்தியடிகள் காட்டிய வழியைப் பின்பற்றி மேன்மை பெற்ற வெளிநாட்டவர்களில் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் உலகால் அறியப்பட்ட ஆளுமைகள். 

மனவெழுச்சிகளைத் திறம்படக் கையாளும்போது இக்கட்டான சூழ்நிலையிலும் தீர்க்கமான முடிவுகளை எடுத்தல், மற்றவர்களுக்கு உதவுதல்,ஒத்துழைத்தல், நிதானமாக நடந்துகொள்ளுதல் போன்ற திறன்கள் வலுப்பெறும்.

Thursday, 1 January 2015

பிரிவோம், சந்திப்போம்!



“என் மகள் பள்ளிக்குக் கிளம்புகையில் நான் தூங்கிக்கொண்டிருப்பேன். நான் வேலையை விட்டுத் திரும்புகையில் அவள் தூங்கிக்கொண்டிருப்பாள். வாரக் கடைசியில்தான் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!” என்று கனமான வார்த்தைகள் சொல்லி விட்டு என்னை ஆழமாகப் பார்த்தார் அவர். 

“இந்த வேலையை விட முடியாது டாக்டர். அவ்வளவு கமிட்மெண்ட்ஸ் இருக்கு. எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு இந்த வேலையை விடணும்னா குறைந்த பட்சம் இன்னும் 10 வருடங்கள் ஆகும். அப்போ என் மகள் படிக்கவோ வேலைக்கோ வெளியே போயிருக்கலாம். என்ன வாழ்க்கைன்னு தெரியலை சார் இது?” என்றார். 

பிரிவுகள்
 
இவர் பரவாயில்லை. குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை எண்ணிப் பாருங்கள். போனில் முத்தம் கொடுத்துக் கொண்டு மெயிலிலும் வாட்ஸ் அப் வீடியோவிலும் பிள்ளைகள் வளர்வதைக் கண்டு, “வரும் போது வாங்கிட்டு வர்றேன் இல்லன்னா யார் கிட்டயாவது கொடுத்து அனுப்பறேன்” என்று பொருட்களில் அன்பையும் பகிரத் துடிக்கும் துடிப்புகளை என்னவென்று சொல்ல? 

வெளி நாட்டில் மட்டுமா? நம் நாட்டிலேயே பிழைக்க மாநிலம் விட்டு மாநிலம் வருபவர் கண்களில் உள்ள ஏக்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அடுத்த முறை பாருங்கள். 

கட்டிட வேலை செய்யும் பெண்கள், மேஜை துடைக்கும் பையன்கள், காவல் காக்கும் வயதான ஆட்கள் என எல்லாரும் தங்கள் சம்பளத்தில் கணிசமான தொகையைக் குடும்பத்துடன் பேசவே செலவழிக்கிறார்கள். 

வேலை நிர்ப்பந்தங்கள்
 
மாதத்திற்கு 20 நாட்கள் குடும்பத்தைப் பிரியும் மனிதர்களுக்கும் குடும்பத்துக்கும் உள்ள இடைவெளி எப்படி இருக்கும் தெரியுமா? பிள்ளை அடிபட்டதைக் கூடத் தாமதித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். பள்ளியின் கூட்டங்களுக்கு போக முடியாது. என்றாவது வரும் பள்ளி விழாக்களில் பிள்ளை கலந்து கொள்வதைக் கூடப் பார்க்க முடியாது. முன்பு தந்தைகள் பட்ட அவஸ்தைகளை இப்பொழுது தாய்களும் படுகிறார்கள். அலுவலக வேலையில் இருந்துகொண்டு மகன் டியூஷனுக்குப் போனானா என்று விசாரிக்கும் அம்மாக்கள் எத்தனை பேர்? 

“என் அப்பாவை எல்லாம் அவர் ரிடையர்ட் ஆனதுக்கு அப்புறம் தான் நிறைய தெரிஞ்சுக்கவே ஆரம்பிச்சேன்” என்று சொல்லும் பிள்ளைகள் நிறைய உண்டு.
முதலில் பிள்ளைகள் பெற்றோர்களைப் பிரிந்த வேதனையில் வாடுகின்றனர். பிறகு பெற்றோர்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாடுகின்றனர்.
வேலை நிர்ப்பந்தங்கள் பிரிவுகளை நிகழ்த்துகின்றன. இவை தவிர்க்க இயலாத நிதர்சனங்கள். 

தீபாவளிக்கும் கிறிஸ்மஸுக்கும் பொங்கலுக்கும் கூட வேலைக்குப் போகும் மக்கள் நிறைய இருக்கிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகளும் இல்லாத பண்டிகைகளில் என்ன விசேஷம்? 


உறவின் அருமை
 
உள்ளூரில் தொழில் செய்து பதினெட்டு பட்டிக்குள் பெண்ணெடுத்து வாழ்ந்த கூட்டுக் குடும்பத்தில் பிரிவுகள் இந்த அளவுக்குப் பாதித்ததில்லை. படிப்புக்காகவும் வேலைக்காகவும் பயணம் செய்வது இன்றைய காலக் கட்டத்தின் இயல்பு. அதனால் இந்தப் பிரிவுகளை ஏற்றுக் கொள்ளுதல்தான் பக்குவம். 

“ஒ.கே. என்ன கருத்து சொல்றீங்க பாஸ்?” என்றால் என் விண்ணப்பம் ஒரு வரிதான். சேர்ந்து இருக்கும் அருமையை உணருங்கள்.
ஆரோக்கியத்தின் மதிப்பு நோயில் தெரியும். உறவின் அருமை பிரிவில் தான் தெரியும். 

மலிவாகக் கிடைக்கும் எதன் மதிப்பும் நமக்கு விளங்காது. நுரையீரல் செயல்படாமல் செயற்கை உறுப்பிற்கு அலையும்போதுதான் வாழ் நாள் முழுதும் சரியாய் பணி செய்த நுரையீரலின் அருமையை உணர்கிறோம்.
வந்து போகும் நண்பர்களின் அருமை யாருமில்லாமல் தனிமையில் இருப்போருக்குத் தான் தெரியும். வீட்டில் இருக்கும் போது தெரியாத மதிப்பு அதை விற்ற பிறகுதான் உணர்கிறோம். 

அது போலத்தான் சேர்ந்து வாழும் குடும்பங்களின் நிலையும். பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து வாழும்போது ஒருவர் மதிப்பு மற்றொருவருக்குப் புரிவதில்லை. 

சதா அலுவல் எரிச்சலில் உள்ள அம்மாவாலோ அப்பாவாலோ தங்கள் குழந்தைகள் மேல் நியாயமான அன்பை வெளிக்காட்ட முடிவதில்லை. அதே போலப் பெற்றோர்களின் மதிப்பையும் பிள்ளைகள் அவர்கள் மறைந்த பிறகுதான் உணர்கிறார்கள். 

ரசனையே ஆரோக்கியம் 

அதனால் கிடைத்த பொழுதைக் குடும்பத்துடன் குதூகலமாகக் கொண்டாடக் கற்றுக்கொள்ளுங்கள். அலுவல் வேலை, வீட்டுப் பிரச்சினைகள், இயந்திர வாழ்வின் அவசரங்கள் என்றும் இருக்கும். ஒரு பரிபூரண நாள் வந்த பின்தான் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் நாள் தான் பரிபூரணமான நாள். 

வாழ்க்கைத் துணை உயிருடன் இருப்பது, உடன் இருப்பது எல்லாம் கடவுள் கொடுப்பினை. இல்லாதவரைக் கேளுங்கள். புரியும். 

நீங்கள் விரும்பும் துணை உங்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் நினைத்ததை உங்கள் பிள்ளைகள் செய்யாமல் இருக்கலாம். நீங்கள் விரும்பிய வேலையை நீங்கள் செய்யாமல் போகலாம். ஆனால் கிடைத்ததை ஏற்று ரசிக்கத் தெரிந்தவர்தான் ஆரோக்கியமாக வாழ்கிறார். 

வாழ்க்கையின் சின்னச் சின்னத் தருணங்கள்தான் பெரிய சந்தோஷங்களைக் கொடுக்கின்றன. அதைச் சேர்ந்து கொண்டாடுங்கள். 

பிரிவுகள் உறவுகளின் உறுதியைச் சோதித்துப் பார்க்க வைப்பவை. மனிதர்களின் மதிப்பைப் புரிய வைப்பவை. 

சேர்ந்து வாழும் காலத்தில் சேமித்த அன்புதான் பிரிவு காலத்தில் நிலை குலையாமல் இருக்கச் செய்யும். 

வேலை மனிதர்களைப் பயணிக்க வைக்கிறது. வாழ்க்கையைப் படிக்க வைக்கிறது. நம் வாழ்வுக்குப் பொருள் உணர்த்தும் வேலையைக் காதலிப்போம். அதன் மூலம் வாழ்வையே காதலிப்போம். 

பிரிவோம்
 
வேலையையும் வாழ்க்கையும் ஆற அமர விவாதித்த நாம் பிரியும் காலம் வந்துவிட்டது. நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு கருத்து சொல்லி, கேள்வி கேட்டு, அன்பு காட்டி, ஆதரவு சொன்ன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. 

பிரிவோம். சந்திப்போம்!

Monday, 24 November 2014

உயிர்களின் தோற்றத்தை அறிவித்தவர்

உயிர்களின் தோற்றத்தை அறிவித்தவர்

 

சர்வதேச பரிணாம வளர்ச்சி நாள்: நவம்பர் 24 
 
டார்வின் (1809 - 1882) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். பரம்பரையாக டாக்டர்களாக இருந்த குடும்பத்தில் அவர் பிறந்தார். டார்வினும் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை அவர் இழந்தார். டார்வின் அப்பாவிடம் டாக்டராகத் தனக்கு விருப்பமில்லை என மறுத்து விட்டார். 

ஆய்வு நூல்
 
சிறுவயதிலேயே அவருக்கு உயிரினங்களை ஆய்வு செய்வது பிடித்தது.22வயதில் அமெரிக்க , ஐரோப்பியத் தீவுகளுக்கு கப்பலில் சென்றார். ஐந்து ஆண்டுகள் ஆய்வுசெய்தார்.அதை நூலாக வெளியிட்டார். உயிரினங்களின் தோற்றம் எனும் டார்வினின் புத்தகம் 1859-ல் இதே தேதியில்தான் வெளியானது. 

அவர் வெளியிட்ட நூல்களில் உயிரினங்களின் தோற்றம் எனும் இந்த நூல்தான் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. இயற்கையோடு ஒன்றிப்போகிற உயிரினங்கள் வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் இந்தப் போராட்டத்திலிருந்து புதிய உயிரினங்கள் தோன்றுவதையும் அவர் இந்த நூலில் விளக்கினார். மாறும் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் தப்பிப்பிழைத்து வாழ்ந்து மேலும் மேலும் சிறந்தவையாக வளர்ச்சி அடையும் என்பது அவரது ஆய்வின் மையம். 

பரிணாம வளர்ச்சி நாள்
 
அப்படியானால் அது மனிதனுக்கும் பொருந்த வேண்டுமே என உலகம் உணர்ந்தது. நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? எனும் கேள்விகள் எழத் தொடங்கின. இத்தகைய விவாதத்தையே அன்றைய கிறிஸ்துவ மத தலைமையான போப் ஆண்டவர் கண்டித்தார். இந்தப் புத்தகத்தின் 1250 பிரதிகளும் ஒரேநாளில் விற்றுவிட்டன. அதன்பிறகு மற்ற பல மொழிகளில் அது மொழியாக்கம் ஆகத் தொடங்கியது. அவர் வாழ்ந்த போதே அவரது நூல் உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டது. 

அவரது நூல் பல பதிப்புகள் கண்டது. 1872-ல் ஆறாவது பதிப்பு வெளியானபோதுதான் அதில் பரிணாம வளர்ச்சி என்ற சொல்லை டார்வின் சேர்த்தார். டார்வினின் பிறந்த நாள் ஒரு சர்வதினமாகக் கொண்டாடப்பட்டாலும் இந்தப் புத்தகம் வெளியான நாளும் பரிணாமவளர்ச்சி நாள் எனத் தனியாகக் கொண்டாடப்படுகிறது. 

அவரது அடுத்த புத்தகம்தான் மனிதனின் தோற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. மண்ணின் வளத்துக்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கியக் காரணம் மண்புழுக்கள்தான் என்பதையும் டார்வின்தான் தெளிவுபடுத்தினார்.
டார்வின் 1882 ஏப்ரல் 19-ல் இறந்தார்.

 

Wednesday, 12 November 2014

புது பாஸ்போர்ட்டுக்கு ஆதார் அவசியம்: மத்திய வௌியுறவுத்துறை முடிவு

புது பாஸ்போர்ட்டுக்கு ஆதார் அவசியம்: மத்திய வௌியுறவுத்துறை முடிவு

 

 

 

புதுடில்லி: புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்க, ஆதார் அட்டையை அடையாளமாக பயன்படுத்த மத்திய அரசின் வௌியுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், புதிய பாஸ்போர்ட் எடுக்க விரும்புபவர்களுக்கு ஆதார் கட்டாயமாகிறது.

தற்போதைய நடைமுறையின்படி, புதிய பாஸ்போர்ட் பெற குடும்ப அட்டை, இருப்பிட சான்றிதழ், போலீஸ் வெரிபிகேஷன் ஆகியவை அவசியமாக உள்ளது. இந்த நடைமுறையின் கீழ், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட்டை பெற கால தாமதமாவதாகவும், குறிப்பாக, போலீஸ் வெரிபிகேஷனுக்காக விண்ணப்பதாரர்கள் பல நாட்கள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது என்றும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆதார் அட்டை அவசியம்:

புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் எந்த ஒரு சலுகை அல்லது சேவையை பெறவோ, ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ள நிலையிலும், பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாஸ்போர்ட் வழங்குவதற்கான புதிய நடைமுறை குறித்து உள்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் கருத்து கேட்கப்பட்டு, பின்னர் பிரதமர் மோடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையில், அது இல்லாதவர்கள், அது குறித்த தங்களின் பதிவு செய்த எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும் என்று சலுகை காட்டப்பட்டுள்ளது.

விரைவான சேவை:

தற்போதைய நடைமுறையில், பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அது குறித்த அறிக்கை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கொடுக்கப்படும், இந்த அறிக்கை கிடைத்த ஒருவாரத்திற்குள் விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். புதிய நடைமுறையின் கீழ், ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி மட்டும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கிடையில், விண்ணப்பதாரர்களின் உறுதியளிப்பின் அடிப்படையில், பாஸ்போர்ட் உடனடியாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் வௌிநாடு பயணம் மேற்கொள்வதற்குள், போலீஸ் வெரிபிகேஷன் முடிக்கப்படும். ஒருவேளை, விண்ணப்பதாரர் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தாலோ, தவறான தகவலை கொடுத்திருந்தாலோ, பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்.