உலகத்தின் நிலப்பரப்பு ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின்
பரப்பளவை வைத்து மதிப்பிட்டால் ஐந்தாவது இடத்தில் அண்டார்ட்டிகா கண்டம்
இருக்கிறது. பூமியின் தென் துருவத்தில் உள்ளது. அங்கே எங்கும் பாறையாக
இறுகிக் கிடக்கிறது ஐஸ். உண்மையான தரை அந்தப் பனிப்பாறைகளுக்கு அடியில் சில
கிலோ மீட்டர்களுக்குக் கீழே இருக்கிறது.
அண்டார்ட்டிகாவுக்கே உரிய சில விலங்குகள் ,சில தாவரங்கள்தான் அங்கே
உயிர்வாழ்கின்றன. அந்தக் கண்டத்தில் ஆய்வு மட்டும்தான் செய்ய வேண்டும் என
1959- ல் 12 நாடுகள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அது தற்போது 49 நாடுகளாய்
விரிந்துள்ளது.
28 நாடுகள் அங்கே ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளன. கண்டத்தின் சில
பகுதிகளை ஏழு நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. இங்கே கோடைக் காலத்தில்
மட்டும் 5000 ஆய்வாளர்கள் வரை இருப்பார்கள்.
இந்தியாவின் கொடி
அண்டார்ட்டிகா மண்ணில் கொடியை நட்ட 13வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக்
கிடைத்துள்ளது. அதை இதே தேதியில் பேராசிரியர் டாக்டர் சயீத் ழகூர்
குவாசிம் நமக்குக் கிடைக்கச் செய்தார். அங்கு இந்தியா ஒரு நிலையத்தை
அமைத்துள்ளது. அதில்தான் பல துறை ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
சயீத்தை தலைவராகக் கொண்ட 21 விஞ்ஞானிகள் கோவா கடற்கரையில் இருந்து ஐஸ்
உடைக்கும் கப்பலில் டிசம்பர் 6- ல் புறப்பட்டனர். நான்காவது முயற்சியில்
அவர்களால் இதே தேதியில் தரை இறங்க முடிந்தது. அங்கே 10 நாட்கள் தங்கினர்.
அங்கிருந்து கிளம்பிப் புறப்பட்ட இடத்துக்கு 1982 பிப்ரவரி 21ல்
திரும்பினர். அவர்களின் பயணம் 77 நாட்களில் முடிந்தது.
உத்திரபிரதேசத்தில் பிறந்த பேராசிரியர் சயீத்துக்கு தற்போது 87 வயதாகிவிட்டது. டில்லியில் இன்னமும் வாழ்கிறார்.
No comments:
Post a Comment